Posts Tagged ‘Slumdog Millionaire review’

Slumdog millionaire review in TAMIL!!!

January 29, 2009

Slumdog Millionaire review in tamil
slumdog_banner1

கலைஞனுக்கு  ஜாதி, மொழி, நாடு என்று எந்த அடையாளமும்  கிடையாது.. வாழ்க்கை பயணத்தில் தான் பார்த்த அழகான அல்லது அழுக்கான விஷயங்களை, தன்  கலை வல்லமையின் வாயிலாக  கட்டாயம் பதிவு செய்து காலத்திடம் ஒப்படைத்து விடுவான், அவன் ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாலும்.. அவன் கலை தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கும் காலத்தின் பதிவுகளில்.

அப்படி மலர்ந்து வரும் வல்லரசு இந்தியாவின் இன்னும் வளராத ஒரு தாழ்வான பக்கத்தினை இந்தியரான விகாஸ்  ஸ்வருப், தன் எழுத்துகளால் பதிவு செய்த Q&A  எனும் நாவலை பிரிட்டனின் பிரபல இயங்குனர் டேனி பாயல் அழகாவே  Slumdog Millionare ராக  படம் பித்து, உலகின் கவனத்தை  ஈர்த்து விட்டார் என்று சொல்லியே ஆகா வேண்டும். Fox Searchlight Pictures தாயரித்த இந்த ஆங்கில படம் தற்போது உலக சினிமா அவார்டுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது!

9164_6601370481

இந்தியா எப்போதுமே  இப்படி வறுமையான வாழ்வியலையும்  கொண்டது தான் என்று இந்த படம் நேரடியாக உலகுக்கு உரக்க சொன்னாலும், இந்த படத்தின் மூலம் இந்தியாவின் கலை திறமையும், கலாசார ரசனையும் மீண்டும் மேற்கத்தியவர்கள் பரவலாக ரசிக்க தொடங்கிவிட்டனர்  என்றும் சொல்ல வேண்டும். அவர்களுக்கு எப்போதுமே பார்வை கோளாறு.. அவர்களின் பார்வைகள் அப்படி தான்..

அதை விட்டு விட்டு,  அவர்கள் போட்டு  கொடுத்த கலை தடத்தை பயன்படுத்தி நம்மவர்கள்  முயற்சி செய்தால், இன்று  கமர்ஷியல் சினிமாக்களில் மட்டும் கொடிகட்டி பறக்கும் நமது  சினிமா, நாளை ஈரானிய சினிமாவுக்கு போட்டியாக இந்திய சினிமா உலக சினிமாவை அதிர வைக்கும் என்பது நிகழ கூடிய உண்மை.

கதை..
இந்தியாவில் நம் எல்லோருக்கும்  பரிச்சயமான கோன் பநேகா க்ரோர்பதி ( Who wants to be a millionare? ) நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் ஜமால் என்கின்ற மும்பை சேரி வாழ் இளைஞன்,  எவ்வாறு போட்டியின் ஒவ்வொரு கடினமான  கேள்விகளுக்கும், தன் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளை தொடர்புடுத்தி, அதனுள் எதிர்பாராமல் ஒளிந்திருந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்தி  பதில் அளிக்கிறான் என்பது தான்.

8942_12271001009

இந்நிகழ்ச்சியில் எப்போதுமே பங்கேற்கும் போட்டியாளரும், பார்வையாளர்களும்  படபடத்து போய் காண்பது போட்டியின் வாடிக்கையான விஷயம், ஆனால் படத்தில் தொகுப்பாளர் ஜமாலின் பதில்களை கண்டு அதிர்ச்சியில் தத்ருபமாக உறைந்து படபடக்கிறார்.

ஒரு கட்டத்தில் கால் சென்டரில்  டி வாங்கி கொடுக்கும் வேலை பார்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஜமால், எவ்வாறு எல்லா கேள்விக்கும் எளிதாக பதில் அளித்து கொண்டு இருக்கிறானே?.. எதோ ஏமாற்று வேலை நடக்கிறது!  என்கிற சந்தேகத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரேம் குமார் (அனில் கபூர் ), கடைசி கேள்விக்கு பதிலளிக்கும் முன் காவல் துறைக்கு  விஷயத்தை தெரியப்படுத்துக்கிறார். இந்திய காவல்துறை வந்து.. எவ்வாறு விசாரிக்கும் என்று தான் அனைவருக்கும் தெரியுமே. காவல் துறை அதிகாரியாக வரும் இர்பான் கான் தன் கடமையை தவறாமல் செய்கிறார். அவர் ஜமாலுக்கு கொடுக்கும் third டிகிரி  கொடுமைகள் நமக்கு ஷாக் அடித்து வலிக்கிறது.

1634_695761361

விசாரணையில் அவன் விவரிக்கும் சம்பவங்களும்.. கொடுமையான அனுபவங்களும்.. அவையனைத்தும் நிகழ்ச்சியின் சாதரண கேள்வி பதில்களுக்குள் எதிர்பாராமல் சிக்கி இருப்பதையும், அந்நிலையிலும்  உண்மையை எனும் ஒரே உடமையை தாங்கி அவன் வாழ்ந்திருப்பதையும்  உணர்ந்த  காவல்துறை அதிகாரி கான், ஜமாலை விடுதலை செய்கிறார்.

விசாரணை முடிந்து, குற்றவாளியில்லை என நிரூபணமாகி,  மீண்டும்  நிகழ்ச்சியின்  கடைசி கேள்விக்கு பதில் அளிக்க வருகையில் … கடைகள் …வீடுகள்…பரபரக்கும் வீதியென ..மும்பை நகரமே  மட்டுமல்லாது இந்தியாவே  டிவி முன் சரண் அடைந்து நிற்கிறது…  டிராபிக்  சிக்னலில் ஜமால் காவல்துறை ஜீப்பில் அமர்ந்து இருப்பதை கண்டு  அவனின் சமுதாய அடையாளங்களான  சேரி மக்கள் “உன்னால் முடியும்,ஜமால்”, என ஆசிர்வதிக்கும் காட்சியை பார்க்கும் போது  நம் கண்களும் நனைகிறது. சபாஷ்! டைரக்டர் சார்!

மூன்று பருவங்களை முன்னுருத்தி கதை நகர்வதால் அதற்கான வயதிலேயே சிறுவர்களையும் சிறுமிகளையும் மற்றும் நடிகர் நடிகையையும் தேர்ந்தெடுத்து நடிக்கவைத்திருக்கிறார்கள்.

287_118048196321875_109587993604952_472235781

ஜமால் ..இந்த கதாபாத்திரத்தை  தாங்கி வாழ்ந்த சிறுவர்கள் அனுஷ், தனே ஹேமந்த் முதல் இளைஞர் தேவ் படேல்வரையிலான நடிகர்கள் என்று சொல்லுவதே தவறு!…அனைவரும் மனதில் இணைந்தே விட்டார்கள்.. அவர்கள் காட்டிய ஏக்கம், சோகம்,சிறுவயதிலிரிந்தே லத்திகாவின் மீது இழையோடிய காதல், அண்ணனின் தூரோகத்தை  மன்னிக்காத  வேகம்,  காவல் துறை அதிகாரியிடம் சிக்கி சித்தரவதை படும் வேதனை, கடைசியாக தொகுப்பாலரின் கேள்விகளை எதிர்கொளும் நம்பிக்கை என் அடுக்கிக்கொண்டே போகலாம்… அவர்கள் வெளிக்காட்டிய எண்ணற்ற உணர்வுகுகள் நம்மை ஜமாலுக்கு ஆதரவாக கதைக்குள் கட்டி போடுகிறது.

2245_4490622636

அதே போன்று லத்திகாவாய் வரும் பெண்கள்  ருபினா அலி, தன்வி கணேஷ்,  பிரெய்தா பின்டோ மூவரும்  தங்கள் சூழ்நிலைகளுக்கு கைதியாகி ஒவ்வோறு  முறையும் சிதைந்து    மீண்டு வெளிவரும் இடங்களில் நம்மை பரிதவிக்க வைத்திருகிறார்கள் .

அடுத்து அண்ணன்  சலீம் மாக வரும் சிறுவர்களும், நடிகரும்(அஸாருதின் முகமத், அஷுடோஷ், மதுர் மித்தல்)  சின்ன  வயதிலேயே வில்லத்தனமும், அசட்டு சிரிப்புடன் செய்யும் கலவாணித்தனமும்,  பேராசையும், கிரோத மும் பிறகு பாசத்துடன் தம்பியுடன் லத்திகாவை சேர்க்கும் தருணங்களில்லும் அசத்தி விட்டனர். படத்தில் சிறு காட்சிகலாயினும் வந்து போன அனைத்து நடிகர்களும் அவ்வாறே!


இசை ஏ. ஆர். ரஹ்மான்.. மேற்கத்தியவர்கள் தான் டார்கேட்  என்பதால் அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம்,  மனுஷன் மேற்கத்திய hiphopping இசையோடு  சம்பிரதயதுக்காக இந்திய மற்றும் பாரசீக இசையையும் கலந்தடித்து கவரத்தான் செய்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் காண்டிட் ஸ்டைலில் ஆண்டனி டொட்  மென்ட்லின்   ஒளிப்பதிவு பயணிப்பதால் அவருக்கு அதிகம் வேலை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ரஹ்மானை விட இதில் மியா இசையமைத்த Paper Planes மற்றும் ஒ சாயா பாடலும்  தான் மேற்கத்தியவர்களிடம்  அதிகமாக கவரப்படுள்ளது. ரஹ்மானை பொறுத்தவரை மொசம்-எஸ்கேப் இசையில் மெதுவாக மெருகேறி அதிக தாள தட்டில் சிதார் இசை தப்பிப்பது போன்ற இசை சேர்ப்பு அருமை, கடைசியாக படத்தில் வரும்  ஜெய் ஹோ! பாடல் யாரையும் ஆட்டம் போட வைத்துவிடும்.

SlumDog Millionare..

திரைக்கதையின் பயணமும்…அதனை பதிந்த விதமும் பார்வையாளர்களை பதப்பதைக்கும் மனதோடு சீட்டின் நுனியில் கனத்த மனதுடன்  அமர வைத்து விடுக்கிறது..

படமே விசாரணையில் தொடங்குவதால், ஜமால் தான் பதிலளித்த பின்னணியை சொல்லும் போது..  அனைத்து பதில்களுக்கும்,  அவன் வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்வை நோக்கி, non linear narative என்ற திரை மொழியின் கிளை காட்சிக்குள் புகுந்து, அவனின் ஒவ்வொரு அனுபவத்தையும் சொல்ல  பயணிக்கிறது சிமோன் பியூபோவின் அருமையான  திரைக்கதை. அதனை டாக்குமென்றி  பாதிப்பில் உண்மையாக நடந்தேறி இருக்கும் என்ற நம்பும்  தோணியில், சில உண்மையான மும்பை கலவரங்களையும் சேர்த்து  காட்சிகளில், சேரி வாழ்வியலையும், அதன் பாதிப்புகளையும், நிகழ்கால கேள்வி பதில் நிகழ்ச்சியோடு  இணைத்து  காட்சியாக வரைந்திருக்கிறார் இயக்குனர் டேனி பாயல்.

மனிதனின் நினைவுகள்..எப்போதும் இழப்புகளை மிக ஆழமாக பதிவு செய்துவிடும் என்ற இயற்கையின் எதார்த்தத்தை தாண்டி, தன் வழக்கமான ஹாப்பி எண்டிங் பார்முலாவை மீண்டும் பயன்படுத்தி மிக ஆழமாக..எதார்த்தமாக.. அழகாக ஞாபகமாக்குகிறார் இயக்குனர் டேனி பாயல் என்று அட்டகாசமாய் வாழ்த்துகிறார் நம் தர டிக்கெட் SlumDog Millionare படம் முடிந்து வெளியே வரும்போது!

By

ILLAYARAJA . V